வடக்கில் இருந்து படையினர் திரும்பப் பெறப்பட வேண்டும்!- நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்

இலங்கையின் வடக்கில் இருந்து படையினர் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்டபோது பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் படையினரால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கப்பட்டனர்.

இதன் விளைவாக சுமார் 20 மாணவர்கள் காயங்களுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது தம்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவங்களின் போது இலங்கையின் படையினர் கடுமையான முறையிலும் கோபமூடடும் வகையிலும் நடந்துக்கொண்டனர்.

இந்தநிலையில் முன்னரும் வடக்கு கிழக்கில் இருந்து படையினர் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று கோரியதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த சம்பவத்தின் பின்னரும் அதனையே தாம் கோருவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் விடுதலைப்புலிகளின் நினைவாக பல்கலைக்கழக மாணவர்கள் சட்டவிரோதமான நிகழ்வை ஏற்பாடு செய்தமையை அடுத்தே தாம் அதனை தடுத்ததாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts