ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் கேஷ விதானகே ஆகியோரே சற்றுமுன்னர் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.