முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
எனினும் கோத்தாபய – ரணில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்தச் சந்திப்பை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி – மகிந்த தரப்பு வட்டாரங்களிலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அலரி மாளிகைக்குச் சென்ற முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவை தனியாகச் சந்தித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சில தினங்களுக்கு முன்னர் தனியாகச் சந்தித்துள்ளார். இதன்போது தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு ஆகியவற்றை சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் தெரிவிக்கின்றன.