அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிக்கவிழ்ப்பை முன்னெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கும் மெரும் மக்கள் போராட்டம் கொழும்பில் ஆரம்பமாகி நடைபெற்று வருகி்றது.
அலரிமாளிகைக்கு அருகாமையில் ஆரம்பமாகிய இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடிக்கும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், 10 சிறப்பு அதிரடிப் படை அணிகளும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.