கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன கட்சியினர் பொங்கல் பரிமாறியதோடு பட்டாசுக் கொளுத்தியும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவி பிரமாணம் செய்தது முதல் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் பல இடங்களிலும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்
அந்தவகையில் நேற்று 28-10-2018 பிற்பகல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க.ஜெயகுமாரன் அவர்களின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பொங்கல் பரிமாற்றப்பட்டதோடு, பட்டாசுகள் கொளுத்தியும் மகிழ்ச்சியையும் வெளிப்படு்தியுள்ளனர்.