Ad Widget

கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கியது கனடா!

கனடா நாடு கஞ்சா பயன்பாட்டை தற்போது சட்டபூர்வமாக்கியுள்ளது. அக்டோபர் 17, 2018 அன்றுமுதல் கஞ்சா என்று தமிழில் அழைக்கப்படும் கன்னாபிசு (Cannabis) என்னும் வயப்பொருளை அகவை 19 ஐத் தாண்டிய யாரும் உட்கொள்வது சட்டப்படி குற்றமில்லை. இதனால் உலகின் மிகப்பெரிய சட்டரீதியான கஞ்சா விற்பனை சந்தையாக கனடா உருவெடுத்துள்ளது.

கஞ்சா பயன்படுத்துபவர்கள் மற்றும் அந்த தொழிலில் முதலீடு செய்பவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கஞ்சா பயன்படுத்துவது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று சுகாதார ஆர்வலர்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்திலும் இப்படியான சட்டம் உள்ளது. இப்பொழுது கனடா முழுவதுக்கும் இச்சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. நன்மை தீமைகளைப்பற்றி விரிவாக அலசப்படுகின்றன.

இந்த கன்னாபிசு என்னும் கஞ்சாவில் மூளையில்தொழிற்படக்கூடிய 115 கன்னபாய்டுகள் (cannaboids) என்னும் வேதிப்பொருள்கள் உள்ளனவாம். இவற்றையும் சேர்த்து 483 வேதிப்பொருள்கள் உள்ளன. அவற்றுள் மூளையில் உளத்திய தாக்கங்கள் ஏற்படுத்தும் தெற்றா-ஐதரோ-கன்னாபினோல் (tetrahydrocannabinol (THC),) என்பதும் ஒன்றாம்.

2015 ஆம் ஆண்டு, கனடாவின் பிரதமர் தேர்தலின் போது, ஜஸ்டின் ட்ரூடே கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்குவேன் என்று பிரசாரத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி தான், கானபிஸ் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை, உருகுவே நாட்டிற்கு பின்னர், கனடா தான் கஞ்சாவை சட்டபூர்வமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கனடாவில் இந்த நடவடிக்கை நேர்மறை விளைவைக் கொடுத்தால் பிற நாடுகளும் நம்மைப் பின்பற்றும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Posts