வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 6 பிரேரணைகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாணசபையால் இதுவரை 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.