வடக்கு மாகாண சபை ஆளுநர் வசம்?

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கான கால எல்லை இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

அதனையடுத்து, குறித்த மூன்று மாகாண சபைகளும் ஆளுநர் வசமாகவுள்ளன.

வட மேல் மாகாண சபை எதிர்வரும் 8ஆம் திகதியும், மத்திய மாகாண சபை எதிர்வரும் 10ஆம் திகதியும், வடக்கு மாகாண சபை எதிர்வரும் 25ஆம் திகதியும் கலைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளின் ஆயுள்காலம் கடந்த வருடத்துடன் நிறைவடைந்திருந்தன.

இந்த நிலையில், தற்போது மூன்று மாகாண சபைகளில் ஆயுள்காலம் நிறைவடைந்ததன் பின்னர், மொத்தமாக 6 மாகாண சபைகளுக்காக ஆயுள்காலம் நிறைவடைவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாக, மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையை ஆராயும் பிரதமர் தலைமையிலான மீளாய்வு குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு இரண்டு மாத காலம் தேவைப்படுவதாகவும், அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை விடமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts