அரசியல் கைதிகள் விவகாரம்: அடுத்தகட்ட பேச்சுக்கு வருமாறு சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடனான கடைசி சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான உடன்படிக்கைகள் தொடர்பில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதிய கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அநுராதபுர சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் தமது விடுதலையை கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts