சமையல் எரிவாயுவின் விலைகள் மற்றும் சீனியின் விலைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் ஒரு கிலோ சீனியின் விலை 20 ரூபாயாலும், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலையை 190 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, அரசாங்கம் குறித்த அதிகரிப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக சந்தையில் எரிவாயு விலை, அமெரிக்க டொலருக்கு ஒப்பிடுகையில் ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி காரணமாக எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 166.64 சதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.