யாழ்ப்பண மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலையில்லாப் பிரச்சினை இரண்டு மடங்காய் உயர்ந்துள்ளது.
புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படியே இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் 5.7 சத வீதமாக இருந்த யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 2016 ஆம் ஆண்டு 7 சதவீதமாக அதிகரித்திருந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 10.7 சத வீதமாக உயர்ந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாக இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் வேலையில்லாப் பிரச்சினை, 2017 ஆம் ஆண்டில் 4.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.