முல்லைத்தீவு வாள்வெட்டு: சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்த நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த ஒருவர் வாள்வெட்டு குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இத்தாக்குதலுடன் தொடர்புடைய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts