யாழில்.நடைபெற்ற திருமண நிகழ்வில் பழுதடைந்த உணவு பரிமாறப்பட்டதால் மூவர் வைத்தியசாலையில்!!

யாழில்.நடைபெற்ற திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்ததில் அதனை உட்கொண்ட மூவர் பாதிப்படைந்துள்ளனர்.

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலையே இச் சம்பவம் நடைபெற்று உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த திருமணத்திற்கான மண்டப ஏற்பாடுகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் என்பவற்றை மணமக்கள் வீட்டார் மண்டப உரிமையாளர்களிடமே ஒப்படைத்துள்ளனர்.

அந்நிலையில் இன்றைய தினம் திருமணம் முடிந்த பின்னர் உணவு பரிமாறப்பட்ட போது வழங்கப்பட்ட மாமிச கறிகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டு உள்ளது.

அதனை அறியாது அதனை உட்கொண்டவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளனர். அதனை அடுத்து திருமண வீட்டில் நின்றவர்கள் உணவை பரிசோதித்த போது , கறிகள் பழுதடைந்துள்ளமையை கண்டறிந்துள்ளார்கள்.

அதனை அடுத்து உடனடியாக கோப்பாய் பொலிசார் மற்றும் அப்பகுதி சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளனர். அதனை கேள்வியுற்று குறித்த மண்டபத்திற்கு சென்ற பொலிசார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் பழுதடைந்த உணவு பொருட்களை கைபற்றி விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது மண்டபத்தில் வழங்கப்பட்ட “ஐஸ்கிறீம் கப்பில்” உற்பத்தி திகதி , முடிவு திகதி என்பன பொறிக்கப்படவில்லை.

அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுகாதார பரிசோதகர்கள் பழுதடைந்த உணவு பொருட்களை கைப்பற்றி மேலதிக நடவடிக்கைக்காக எடுத்து சென்றனர்.

அதேவேளை குறித்த உணவுக்கு ஒருவருக்கு 1500 ரூபாய் வீதம் பணம் மண்டபத்தினருக்கு செலுத்தப்பட்டதாகவும் , உணவு பழுதடைந்தமை தொடர்பில் தாம் மண்டபத்தின் பொறுப்பாளருக்கு அறிவித்த போது , ” சாப்பாடு பழுதாபோனால் அதை சமையல்காரிடம் சொல்லுங்கள் ” என பொறுப்பற்ற விதத்தில் , தமக்கு பதிலளித்ததுடன் தம்முடன் நாகரிகமாற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் , திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Related Posts