முல்லைத்தீவு, திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் பொலிஸாரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்துக்கென சிறப்பாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசராஜாவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நாட்டை ஆளப்போகும் எதிர்கால சந்ததிகள் இம்மாணவர்களே. அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என நிகழ்வில் கலந்துகொண்ட அத்தியட்சகர் த.கணேசராஜா தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு மாகாண பிள்ளைகளே அதிகம் பொறியியலாளராகவும், கணக்காளராகவும், வைத்தியராகவும் வந்துள்ளார்கள். அதேபோல் எதிர்வரும் காலங்களிலும் கல்வியை முதன்மையாகக் கொண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே நாம் செய்யும் இச்சேவை மூலம் பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையிலான ஒத்துழைப்பு மேன்மைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.