“ஜனபலய” ஒருவர் பலி ; மதுபோதையால் 81 வைத்தியசாலையில் அனுமதி!

கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவால் சுமார் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 8 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையில் இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொழும்பில் பல்லேறு இடங்களில் வந்திறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியில் லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts