கிளிநொச்சியில் மாகாண மேல் நீதிமன்றை உள்ளடக்கிய நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடத் தொகுதி 450 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (3) நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று (03-09-2018) காலை 09.00 மணிக்கு இந்த அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதி அமைச்சர் தலதா அத்துக்கொறல ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டனர்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லஹ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.அர்.டி சில்வா, மாவட்ட நீதிபதிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகததர்கள் எனப்பலர்கலந்து கொண்டனர்.