கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்!

கிளிநொச்சியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகதரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் காணப்பட்டுள்ளமயினால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட ஊடகவியலாளர் ஒருவரும் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இணைந்து கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரேனும் இன்று கடமைக்கு வரவில்லையா என வினவியிருக்கின்றனர் இதன் போது அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவர்களிடம் விசாரித்ததன் பின்னர் குடும்பத்தவர்களை அழைத்துக்கொண்டு வைத்திய சாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு அடையாளம் காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பிரதி காவற்துறை மா அதிபருக்கு ஊடகவியலாளர் தகவலை வழங்கியுள்ளார்.இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பெண் கணவனால் கைவிடப்பட்டவர் எனவும், ஜந்து வயதில் மாற்றுத்திறனாளி பெண் குழந்தை ஒன்றும் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இவர் இறுதியாக நேற்று முன்தினம் இரவு (28.818) மாலை 7.15 மணிக்கு ஆடைத் தொழிற்சாலையில் தனது கடமையினை நிறைவு செய்திருக்கிறார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதோடு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts