முன்னாள் ஆளுநர் பதவிவிலக காரணமான சி.வி.விக்னேஷ்வரனே வருத்தப்படுவது வேடிக்கையானது

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ்.பளிகக்கார பதவிவிலக சி.வி.விக்னேஷ்வரனே காரணம் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் அவரது இராஜினாமாவிற்கு வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது வருத்தப்படுவது போல் நடிப்பது வேடிக்கையாக இருப்பதாக, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவினால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பளிகக்கார ஆளுநராக கடந்த 2015 ஜனவரி மாதத்தில் நியமனம் பெற்று வந்திருந்தார். முதலமைச்சரினால் பளிகக்காரவிற்கு 2016 ஆரம்பத்தில் கடிதம் ஒன்று எழுதப்பட்டது.

அக் கடிதத்தில் ‘This amounts to cannibalism’ என்ற வார்த்தைப் பிரயோகமும் அமைந்திருந்தது. இதனால் மிகவும் வேதனையடைந்த பளிகக்கார தனது இராஜினாமாவைக் கொடுத்து 2016 பெப்ரவரி மாதம் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், அதற்கு வருத்தப்படுவது போல் நடிப்பது வேடிக்கையாக இருப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts