ரயில் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

ரயில் ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வந்துள்ளதாக ரயில் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைப்போன்று இயங்குமெனவும் அத்தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில் இயந்திர ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சம்பளம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் ஜனாதிபதி நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts