பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு பணித்த ஜனாதிபதி

பொலன்­ன­று­வை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் உடற்­ப­யிற்சி, நடை­பாதை வளா­கத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால திறந்து வைத்த பின்­னர் பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு மைத்­திரி பணித்த காணொலி சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் வேக­மா­கப் பரவி வரு­கின்­றது.

பொலன்­ன­றுவை அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­தின் கீழ் உடற் பயிற்சி வளா­க­மொன்றை மைத்­திரி திறந்­து­வைத்­தார். இந்த நிகழ்­வுக்கு உடற்­ப­யிற்சி ஆடை­களை அணிந்­த­வாறே மைத்­தி­ரி­யும் ஏனைய அதி­கா­ரி­க­ளும் வருகை தந்­தி­ருந்­த­னர். பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ர­வும் நிகழ்­வில் கலந்து கொண்­டி­ருந்­தார்.

அந்த வளா­கத்­தில் பூஜித்த ஜய­சு­தந்­த­ரவை மைத்­தி­ரி­பால 100 தடவை பயிற்சி செய்ய வைத்­தார். பூஜித்த ஜய­சுந்­தர எழுந்து நிற்க முற்­பட்ட போது மைத்­திரி அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை. ‘‘ஐ.ஜி.பி. என்­றால் சாதா­ரண மனி­தரா? நூறு தடவை பயிற்சி செய்ய வேண்­டும்’’ என்று கூறி மறு­ப­டி­யும் பயிற்சி செய்ய வைத்­தார்.

பூஜித்த ஜய­சுந்­தர பயிற்சி செய்து கொண்­டி­ருந்­த­போது, சாதா­ரண பொலிஸ் அதி­காரி ஒரு­வர் – 10 தட­வை­யும், ஐ.பி. 15 தட­வை­யும், ஏ.எஸ்.பி. 20 தட­வை­யும், எஸ்.எஸ்.பி. 30 தட­வை­யும், டி.ஐ.ஜி. 50 தட­வை­யும், மூத்த டி.ஐ.ஜி. 75 தட­வை­யும், ஐ.ஜி.பி. 100 தட­வை­யும் பயிற்சி செய்­ய­வேண்­டும் எனக் கூறி­னார்.

Related Posts