வவுனியா நகரின் சந்தை பகுதியில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் நேற்றய தினம் (02.08.2018) காலை 9.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சீனி கொள்ளவனவு செய்த பொதுமக்களை அவற்றை பாவிக்க வேண்டாமேனவும் உடனடியாக திருப்பி வழங்குமாறு வவுனியா பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனியா சதோச விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட தேவைக்காக யூரியா பசளை அடங்கிய மூடையை சதொச விற்பனை நிலையத்தில் வைத்துள்ளார். அதனை அங்கு பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் சீனி என நினைத்து சீனி அடங்கிய கொள்கலனில் கலந்துள்ளதுடன் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் நேற்று (02.08.2018) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை வவுனியா நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் சீனி கொள்வனவு செய்த பொதுமக்களை அவற்றை உபயோகிக்க வேண்டாமேனவும் அவற்றை உடனடியாக மீள வழங்குமாறு பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ,மற்றும் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை தகவல் அறிந்த சுகாதார பரிசோதகர்கள் சதொச விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்த பொழுது அங்கிருந்த பணியாளர் ஒருவர் தாம் அமைச்சர் ஒருவரின் பெயரை கூறி அவருடைய ஆட்கள் என்றும் எம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் மிரட்டியுள்ளார் என சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் குறித்த சதொசவினுள் யூரியா பசளை எவ்வாறு உட்கொணரப்பட்டது..? முகாமையாளர் எவ்வாறு அனுமதித்தார் என்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்துக்களை பகிர்கின்றனர் .