இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இருதய நோய் காரணமாக 24 மணித்தியாலங்களுக்குள் 150 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

வருடத்திற்கு 48 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர். இவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முடியும். புகையிலைப் பாவனை மற்றும் மது பாவனையே இருதய நோய்க்கான பிரதான காரணிகளாக அமைகின்றன.

அதேநேரம், கொலஸ்ட்ரோல் அதிகரிப்பும் இருதய நோயாளர்களைப் பாதிக்கின்றது’ என கூறியுள்ளார்.

Related Posts