அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் 215 சதவீததத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சம் 40 ஆயிரம் ரூபாவாகவும் பிரதி அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.