வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பற்கு கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகாலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மட்டும் கடலட்டை பிடிக்கலாம் என்று அத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடலட்டை பிடிப்பு தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தங்கள் பகுதி கடற்தொழிலாளர் சங்கங்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடலட்டை பிடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி மற்றும் காலணி என்பவற்றைப் பயன்படுத்தி பிடிக்க முடியும் என்றும் ஒட்சியன் சிலின்டர் கொண்டு பிடிப்பவர்கள் தங்களுக்கான அனுமதியினை நீரியல் வள அமைச்சின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.