வவுனியா தட்டாங்குளம் பகுதியில் விசம் கலந்த நீரை பருகியதால் நான்கு பசுமாடுகள் நேற்றுமுன்தினம் இறந்திருந்த நிலையில் நேற்றும் இரு மாடுகள் இறந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மாடுகள் நேற்று வீடு திரும்பாத நிலையில் உரிமையாளர்கள் தேடியுள்ளனர். அவை காட்டுப் பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
வாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுமாடுகள் விசம் வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளன என்று சந்தேகிக்கப்படுகின்றது.
தற்போது 6 பசுமாடுகள் இறந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யபட்ட அயற்கிராமத்தை சேர்ந்த சிங்கள பெண் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளார்.