யாழ் போதானா வைத்திசாலையின் ஆய்வுகூடத்திற்குத் தேவையான இராசாயனப் பொருட்கள் பற்றக்குறையாகக் காணப்படுவதால் ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதானா வைத்திசாலையின் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தாரஜா தெரிவித்துள்ளார்.
குறித்த பொருட்கள் வழங்கும் நிறுவனத்திற்கு வைத்திசாலை நிர்வாகம் பொருள் வழங்கலுக்கான நிதி வழங்கவேண்டியிருந்தது. இதனால் குறித்த நிறுவனம் வைத்திசாலைக்கு வழங்க வேண்டிய இராசயானப் பொருட்களை குறைத்துள்ளது. இதனால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதோடு குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி இன்னமும் வழங்கப்படவில்லை. இருந்து குறித்த நிறுவனம் நேற்றைய தினம் சில இராசயனப் பொருட்களை வழங்கியுள்ளது.
இனிவரும் நாட்களில் குறித்த நிறுவனத்திற்குரிய கொடுப்பனவு கொடுக்கப்பட்ட பின்னர் சீரான முறையில் இராசாயனப் பொருட்கள் வழங்கல் இடம்பெறும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.