விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்தியல் இன்னும் பல நாடுகளில் காணப்படுகின்றது என மலேசியாவின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் டன் ஸ்ரீ முசா ஹசன் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் தொலைக்காட்சி சேவையொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.
புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் விரவிக் காணப்படுகின்றனர் என்றும், அவர்களால் மலேசியாவிற்கும் அச்சுறுத்தல் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக கருதக் கூடாதென்றும் அவர் கூறியுள்ளார்.
புலிகள் இயக்கமானது மலேசியாவிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில், மலேசியாவின் பெனாங் மாநில பிரதி சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி.பி.ராமசாமி, புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அண்மையில் விமர்சிக்கப்பட்டார். எனினும், அவர் அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.