ஆசிரியர்களுக்கான இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்கப்படுமென்று வட மாகாண கல்வி பணிப்பாளர் ஆர்.செல்வராஜா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.வடமாகாணத்தில் உள்ள 12 வலயத்திலும் இருந்து 1500 ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக கூறினார்.
பரிசீலனைகளின் பின்னர் வன்னி பாடசாலைக்கு யாழ். மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் இடமாற்றப்படுவர்கள். 5 வருட சேவைக்காலத்தினை பூர்த்தி செய்த ஆசிரியர்களே இடமாற்றப்படுவார்கள் என அவர் கூறினார்.
அதேவேளை, வன்னி பிரதேசத்தில் 5 வருட சேவைக்காலத்தினை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் விண்ணப்பத்தில்; குறிப்பிட்டவாறு கஷ்ட பிரதேசமாயின் 5 வருடத்திற்கும், வசதியான பிரசேதமாயின் 6 வருடத்திற்கும் இடமாற்றப்படுவார்கள்.
ஆசிரியர்களினால் அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியில்லாதவர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் நீக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுமென்று மாகாண கல்வி பணிப்பாளர் மேலும் கூறினார்.