ரயில் சாரதிகள் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் சங்கங்கள் அறிவித்துள்ளன.
சம்பள முரண்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பில் ரயில் காவலர்களும் கட்டுப்பாட்டாளர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.