விடுதலைப் புலிகளின் சமாதிகளை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மஹகரகம பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிசிர ஜயகொடி இதனை தெரிவித்தார்.
“முன்னாள் விடுதலை புலிகளின் குடும்பங்கள் மற்றும் விடுதலை புலிகளை நினைவுகூறும் தினங்களுக்கு நிதி வழங்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர தயாராகவுள்ளது.
அதாவது இழப்பீடுகளை வழங்கும் சட்டமே அது. யாருக்கு இதனூடாக பணம் வழங்கப்பட போகின்றது. அதாவது உயிரிழந்த விடுதலை புலிகளுக்கே இந்த நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தை ஏமாற்றியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்த புதிய சட்டத்தில் விடுதலை புலிகளின் சமாதிகளை புனரமைக்கவும், அவர்களை நினைவு கூறும் நிகழ்வுகளை நடத்தவும் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
அதேபோல் காணாமல் போனவர்களின் குடுபத்தினர். அவர்களது பேரன், பேத்திகளுக்கும் இழபீட்டை வழங்க அரசாங்கம் முயற்சிக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.