வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்படுத்துவதற்கு 400 க்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சேவைக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்
வடக்கில் தலைதூக்கியுள்ள ஆவா குழுவை இதன்போது கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதற்காக வவுனியா,மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் காரணமாகவே வடக்கு மாகாண பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரொஷான் பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.