கிளிநொச்சியில் விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

பாதசாரிகள் கடவையை கடக்க சென்ற மாணவியொருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்கு அருகில் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட மாணவி மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வாகனமொன்று மோதியதில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த, உமையாள்புரம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய நிலையிலேயே விபத்து சம்பவித்துள்ளது.

விபத்திற்குள்ளான மாணவி, விபத்தை ஏற்படுத்திய வாகனத்திலேயே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts