அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மற்றும் இனங்கள் தொடர்பாக தவறான கருத்துக்களை பரப்பும் 80 சமூக வலைத்தளங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு ஊடகங்கள் தவறான வழியில் செல்லும் பின்னணியில் புதிதாக உருவான அரசியல் கட்சிகள், மற்றும் இளைஞர் குழுவொன்று காணப்படுவதாக தமக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ராஜித தெரிவித்தார்.
இதனால் அரசாங்கத்து எதிராக செயற்படும் ஊடகங்கள் அனைத்தும் தற்போது இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவைகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.