நல்லூர் போராட்டத்துக்கு அணிதிரள இந்துக்களுக்கு சைவ மகா சபை அழைப்பு!

இந்துமத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று (13) புதன்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அரசால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் சைவ சமயிகள் அணிதிரண்டு வருகைதந்து தமது எதிர்ப்பை பதிவுசெய்யுமாறு சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Related Posts