சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாயத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி சபாநாயகர் பதவியை வழங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சேபனை தெரிவித்தது.
அதனால் அங்கஜன் இராமநாதனை பிரதி சபாநாயகராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளிக்கவில்லை.
இந்த நிலையில் அங்கஜன் இராமநாதன் விவசாயத்துறை பிரதி அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்களும் ஐந்து பிரதி அமைச்சர்களும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:
இராஜாங்க அமைச்சர்கள்
ரஞ்சித் அலுவிகார – சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
லகீ ஜயவர்த்தன – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்,சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
அஜித் மான்னப்பெரும – சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்
அங்கஜன் ராமநாதன் – விவசாயத்துறை பிரதி அமைச்சர்
காதர் மஸ்தான் – மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்
எட்வட் குணசேக்கர – உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்
நலின் பண்டார ஜயமஹ – பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சர்