இந்துக்களின் பாரம்பரிய பண்டிகை தீபத்திருநாள் அன்று தீபமேற்றுவதற்கு தடை விதிக்க இராணுவத்திற்கு அதிகாரமில்லை’ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
‘பண்டைக்காலம் முதல் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அனுஷ்டிப்பது வழக்கம். அன்றைய தினம் மாவீரர் தினம் வந்தால் மக்களை தீபம் ஏற்றக்கூடாது என்று தடை விதிப்பது மனித உரிமையை மீறும் செயல். அத்துடன், இறந்தவர்களை நினைவுகூறும் முகமாக ஆலயங்களிலும், வீடுகளிலும் , தீபமேற்றுகின்றோம். அப் பண்டிகைக்கு தடை போட எவராலும் முடியாது
அவ்வாறு, தடைபோட்டால் மக்களை புகார் செய்யுமாறு பணிக்கின்றேன்.
அன்றைய தினம், யாழ். மற்றும் வன்னியில் உள்ள அனைத்து மக்களும் வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபமேற்றி பண்டிகையை கொண்டாட முன்வர வேண்டும்’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.