தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும், அஞ்சலி நிகழ்வும்

தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த 22.05.2018 அன்று காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். குறிப்பாக இப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவற்துறையினர் குறிசூட்டுத்தாக்குதல் நடத்தியதன் மூலம் பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

ஜனநாயக வழியிலான போராட்டத்தை துப்பாக்கி முனையில் நசுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் போராட்டமும், கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வும் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ள கண்டனப் போராட்டங்களிலும் நினைவஞ்சலி நிகழ்வுகளிலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டம்:
திகதி: 26.05.2018 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: காந்திபூங்கா, மட்டக்களப்பு பஸ் நிலையம் அருகாமை.

யாழ்ப்பாண மாவட்டம்:
திகதி: 26.05.2018 (சனிக்கிழமை)
இடம்: யாழ் பஸ்நிலையம் முன்பாக
நேரம்: மாலை 03.00 மணி

நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts