சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.
இன்று மற்றும் நாளை, எதிர்வரும்; 26ஆம் மற்றும் ஜூன் 02 ஆம் திகதி ஆகிய நாட்களில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று நடைபெறவிருந்த இலங்கை மத்திய வங்கியின் உதவிப் பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை,
நாளை நடைபெறவிருந்த ஏற்றுமதி விவசாய அமைச்சின் திட்ட அலுவலர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்காக ஆட்சேர்ப்பு பரீட்சை,
26ஆம் திகதி நடைபெறவிருந்த மத்திய வங்கியின் முகாமைத்துவ பயிற்சியாளர்களுக்கான தகுதிகாண் பரீட்சை,
27ஆம் திகதி நடைபெறவிருந்த நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் தகுதிகாண் அதிகாரி ஆட்சேர்ப்புக்காக போட்டி பரீட்சை,
உள்ளிட்ட இன்னும் சில பரீட்சைகள் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், பிற்போடப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.