பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சி பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள் அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்கள் வழங்க பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என வட மாகாண உதவி பதிவாளர் நாயகம் ஆனந்தி தெரிவித்தார்.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நடமாடும் சேiயில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
நீண்ட காலமாக பலர் முக்கியமான அவணங்கள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக பலர் அந்த ஆவணங்களின் முக்கியத்துவத்தை அறியாமல் சில சலுகைகளைக் கூட இழந்து விடுகின்றார் என அவர் தெரிவித்தார்.
அவ்வாறு ஆவணங்கள் இல்லாது இருப்பவர்கள் அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்களை வழங்க பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.