முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மழையுடன் கூடியகடும் காற்று வீசியதன் காரணமாக மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த மினி சூறாவளியால் மாங்குளம், துணுக்காய் வீதியில் அமைந்துள்ள சுமார் 10 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில வீடுகள் சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிரேமகாந்த் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.