அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர்.
இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் பொலிஸாரை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.
தப்பி ஓடிய பிரசாத்தை துரத்திய பொலிஸார் அப்பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையம் அருகே மடக்கி பிடிக்க சென்ற போது அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் 3 தடவை சுட்டுள்ளார்.
உடனே பொலிஸார் பிரசாத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கிலக்காகி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்துள்ளார்.