சபைகளை அமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பலர் எமது கட்சியுடன் பேசி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுக்கள் எதுவும் நடத்தவில்லை என்று கூறுவதானது “ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி கடந்த பின்னர் நீயாரோ நான்யாரோ” என்ற கதைபோல் உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவிநிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்
யாழ் ஊடக அமையத்தில் நேற்றயதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எம்மோடு எவ்விதமான பேச்சுவர்த்தைகளும் நடத்தவில்லை என்று கூறிவருகின்றார்கள்.
கூட்டமைப்பின் இந்தக் கூற்றை நாம் மறுக்கின்றோம். ஏனென்றால் அவர்கள் எம்முடன் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் இதுவிடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளது.
அனாலும் அதுதொடர்பில் அலட்டிக்கொள்ளாது அமைக்கப்பட்டுள்ள சபைகளை மக்கள் நலன்களை முன்னிறுத்தியதாக செயற்படுத்திச் செல்வதற்கு அனைத்தத் தரப்பினரும் பாடுபடவேண்டும் என்றும் சிவகுரு பாலகிருஸ்ணன் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.