பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வாக்களிக்கும் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இன்று காலை இடம்பெறவுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதென்ற முடிவை உத்தியோகபூர்வமாக எடுத்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளனர்.
தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைவரத்தை ஆராய்ந்துபார்க்கையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருக்கும் இடத்து பிரேரணை சில வேளைகளில் நிறைவேறிட வாய்ப்புள்ள சூழ்நிலையிலேயே பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது..
முன்னதாக பிரேரணை மீதான வாக்களிக்களிப்பில் பங்கேற்காதிருப்பது குறித்தும் கூட்டமைப்பினர் பரிசீலித்ததாகவும் தெரியவருகின்றது.