Ad Widget

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவி!

2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில்இ கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன்இ உடல்தகுதிஇ காயம் ஏற்படாமல் தடுத்துல் போன்ற பணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணியில் வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை இப்போது இலங்கை வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது இதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஜிபிஎஸ் கருவி இலங்கை வீரர்களின் முதுகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வீரர்கள் களத்தில் இறங்கும்போது அவர்களின் முதுகில் பச்சை , நீல நிறத்தில் விளக்குகள் ஒளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் வீரர்களின் உடல்தகுதி, திறனை ஓய்வறையில் இருந்தே பயிற்சியாளர் கண்காணிக்க முடியும் என்பதுடன் வீர்ர்கள் எத்தனை நிமிடங்கள் உடல்பயிற்சி மேற்கொண்டார்கள் களத்தில் எத்தனை நிமிடங்கள் செயலூக்கத்துடன் இருந்தார்கள் எனபவற்றினையும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களின் பணிப்பளு தொடர்பிலும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும்இ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts