ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையை எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதன்போது இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான மோதல்களை தொடர்ந்து, போலியான செய்திகளின் மூலம் பதற்றம் தூண்டப்படுவதை தடை செய்யும் வகையில் நாடளாவிய ரீதியில் அனைத்து சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டன. இவை தொடர்ந்து எட்டாவது நாளாகவும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.