கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்களை மீள செயற்படுத்துவது குறித்து இன்று (திங்கட்கிழமை) விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், அரச அதிகாரிகள், இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்குழு அதிகாரிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த சமூக வலைதளங்கள் முடக்கத்தினால் பொய் பிரசாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் பிரகனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை நாளை (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது.