அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த முன்பிணை வழங்கப்பட்டுள்ளது.
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக அவருக்கெதிராகக் குறித்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது