நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை 10 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இன வன்முறைகளைத் தடுக்கவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வௌயிடப்படும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
10 நாள்களுக்கு அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரம் நாடாளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
போர்க் காலத்தில் நீடித்த அவசரகாலச் சட்டம் 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நீக்கப்பட்டது.