ஆட்கள் பதிவுத் திணைக்களத்தால் 15 வயதை அடைந்தவர்களும் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், “15 வயதை பூர்த்தியடைந்தவர்களும் இனிவரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் செயன்முறையில் வயதெல்லை மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் அடையாள அட்டை வழங்கப்படும் முறையில் வழமையான நடைமுறையே பின்பற்றப்படும்.
கடந்த காலங்களில் 16 வயதை நிவர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கப்பட்டு வந்தது. எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.