முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய 10 பேரை முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.50 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய வெடிமருந்துகள், மின்பிறப்பாக்கி மற்றும் பல உபகரணங்களையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். விசாரணையின் பின்னர் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சந்தேகநபர்கள் கண்டி, நுவரெலியா, முல்லைத்தீவு, விஸ்வமடு, நிட்டம்புவ, வத்தேகம உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் முன்னாள் போராளிகளும் இதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பிரதானி ஆனந்த பிரேமசிறியின் வழிகாட்டலில் என்.எஸ்.புஸ்பகுமார தலைமையிலான குழுவினரே இவர்களை கைதுசெய்துள்ளனர்.